அமெரிக்கா மீது ஐரோப்பா பதிலடி வரிக்கு திட்டம்

EU

ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் steel, aluminum ஆகிய இரண்டு உலோகங்களுக்கும் 25% மேலதிக வரியை நடைமுறை செய்யப்போவதாக அமெரிக்காவின் ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் பதிலடி வரிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கவுள்ளதாக கூறியுள்ளன.
.
இன்று புதன் European Commission இந்த திட்டத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் peanut butter, orange juice, whisky ஆகிய பொருட்கள் வரிக்கு உட்படலாம் என்று கருதப்படுகிறது.
.
அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அண்மையில் “trade wars are good and easy to win” என்று கூறியிருந்தார். அதை நினைவு செய்த European Council President Donald Tusk வர்த்தக யுத்தங்கள் “easy to lose” என்று கூறியிருந்தார்.
.
ஐரோப்பிய நாடுகளின் பதிலடி வரிக்கு உள்ளாகும் பொருட்களின் முழு விபரம் இந்த மாதம் 22ஆம் திகதி வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.
.

அதவேளை ரம்ப் அரசில் பொருளாதார ஆலோசகராக இருந்த Gary Cohn என்பவர் அமெரிக்காவின் புதிய வரி முறையற்றது என்று கூறி, தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.
.