அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு இஸ்ரேல் தடை

Israel

அமெரிக்காவின் Democratic கட்சியை சார்ந்த Rashida Tlaib என்ற பலஸ்தீனர் வழிவந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருக்கும், அதே கட்சியை சார்ந்த Illhan Omar என்ற சோமாலியர் வழிவந்த காங்கிரஸ் உறுப்பினருக்கும் விசா வழங்க இஸ்ரேல் மறுத்துள்ளது. அமெரிக்காவின் Republican கட்சியை சார்ந்த ஜனாதிபதி ரம்பும் இஸ்ரேலின் தடையை பாராட்டி உள்ளார்.
.
மேற்படி இரண்டு பெண்களும் பாலஸ்தீனருக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்ததே இஸ்ரேலின் சினத்துக்கு காரணம்.
.
அமெரிக்காவில் முழுமையாக தங்கியிருக்கும், அமெரிக்காவின் முதல் நட்பு நாடான இஸ்ரேல் அமெரிக்காவின் சாதாரண குடிமகனுக்கு விசா வழங்க மறுப்பதே விசாரணைக்குரிய விசயமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவில் சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட இரண்டு பிரதிநிதிகளை இஸ்ரேல் தடுப்பது நகைப்புக்குரியதே.
.
அத்துடன் ஒரு ஜனாதிபதி அந்நாட்டு சட்டப்படி வழங்கிய கடவுசீட்டை (passport) இன்னோர் நாடு உதாசீனம் செய்வதை பாராட்டுவது அந்த நாடு எவ்வளவுக்கு உடைந்து உள்ளது என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

.