அமெரிக்க இராணுவ கொலைக்கு ரஷ்யா சன்மானம்?

Afhanistan

ஆப்கானித்தானில் தலபானால் கொலை செய்யப்படும் ஒவ்வொரு அமெரிக்க படையினருக்கும் ஈடாக ரஷ்யா தலபானுக்கு சன்மானம் (bounty) வழங்கியது என்று அமெரிக்காவுக்கு இரகசிய துப்பு கிடைத்ததாக The New York Times, Washington Post, Wall Street Journal ஆகிய அமெரிக்க பத்திரிகைகள் கூறி உள்ளன.
.
மேற்படி சன்மானம் வழங்கலை ரஷ்யாவின் உளவுப்படையான GRU செய்ததாக அமெரிக்க செய்திகள் கூறுகின்றன. ஐரோப்பாவில் இடம்பெறும் சில படுகொலைகளின் பின்னணியிலும் GRU உள்ளதாக மேற்படி செய்திகள் கூறுகின்றன.
.
ஆனால் ரஷ்யா மேற்படி கூற்றை மறுத்து உள்ளது. தலபானும் கூடவே மேற்படி கூற்றை மறுத்து உள்ளது.
.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் உளவுப்படை இது தொடர்பாக சனாதிபதி ரம்புக்கு தெரிவித்து இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் ரம்ப் தனக்கு இந்த விசயம் கூறப்படவில்லை என்று மறுத்துள்ளார். ரம்ப் எப்போதும் ரஷ்யாவின் பூட்டினை புகழ் பாடுபவர்.
.
Cold War காலத்தில் ஆப்கானித்தானில் நிலை கொண்டிருந்த USSR படைகளை கொலை செய்ய அமெரிக்கா அக்கால தலபானுக்கு ஆயுதங்களையும் உதவிகளையும் வழங்கி இருந்தது.
.
கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 13,000 அமெரிக்க படையினர் ஆப்கானித்தானில் பலியாகி இருந்தனர்.
.