அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நெருக்கம், ரஷ்ய விருப்பம்?

Oil_Well

இஸ்ரேலுடன் அரபு நாடுகள் மோதிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில், அன்றைய எண்ணெய் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இஸ்ரேலின் உறவு நாடுகள் மீது எண்ணெய் ஏற்றுமதி தடையை விதித்தன. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்க அவற்றின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகின.
.
1973 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா படிப்படியாக எண்ணெய் உற்பத்தியில் சுயாதீனம் அடைய முயற்சித்தது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி செலவு மிகவும் அதிகம் என்றாலும், வளர்ந்து வந்த உலக பொருளாதாரம் எண்ணெய் விலையை மிகையாக அதிகரிக்க, அமெரிக்காவின் உற்பத்தி இலாபகரமானது.
.
1973 இல் அதிக எண்ணெய் விலையால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரம் இன்று குறைந்த எண்ணெய் விலையால் பாதிக்கப்படுகிறது. சவுதியுடனான ரஷ்யாவின் எண்ணெய் யுத்தம் உலக சந்தையில் எண்ணெய் விலையை குறைத்து, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றுவதே. கொரோனா வரைஸ் அந்த யுத்தத்தை மேலும் உக்கிரம் அடைய செய்துள்ளது.
.
தற்போதை நிலைப்படி ரஷ்யா தனது விருப்பத்தை சற்று அடைந்து வருகிறது.
.
அமெரிக்காவின் Chevron என்ற எண்ணெய் உற்பத்தி நிறுவனம் $8 பில்லியன் பெறுமதியான தனது முதலீடுகளை தற்போது நிறுத்தியுள்ளது. அதில் $2 பில்லியன் shale எண்ணெய் திட்டங்களுக்கானது. இதில் வேலை நிறுத்தங்களும் அடங்கும். அத்துடன் Chevron பிலிப்பீன் நாட்டில் உள்ள தனது எண்ணெய் அகழ்வு கிளையை $500 மில்லியனுக்கு விற்பனை செய்யவும் உள்ளது.
.
Texas மாநிலத்து Houston நகரில் உள்ள Schlumberger நிறுவனம் $500 மில்லியன் முதலீட்டு குறைப்பை செய்யவுள்ளது. இது பெருமளவு வேலை நிறுத்தங்களையும் செய்யவுள்ளது.
.
Halliburton என்ற நிறுவனம் 3,500 ஊழியர்களை தற்காலிக வேலை நிறுத்தத்தில் வீட்டுக்கு அனுப்ப உள்ளது.
.
மேலும் பல அமெரிக்க எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தொழிலாளர் குறைப்பை நடைமுடை செய்ய முனைந்து வருகின்றன.
.
Institute for Energy Economics and Financial என்ற அமைப்பின் கணிப்பின்படி கடந்த 10 ஆண்டுகளில் 34 அமெரிக்க shale எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தாம் கொண்ட வருமானத்துக்கும் மேலாக $189 பில்லியன் செலவை செய்துள்ளன.
.
அதேவேளை கனடாவின் எண்ணெய் நிறுவனங்களும் நெருக்கடிக்குள் உள்ளன. அதனால் கனடாவின் நாணய பெறுமதி பாரிய சரிவை அடைந்து வருகிறது (1 Can $ = $US 0.70, as of March 25, 2020.
.