அமெரிக்க கடற்படைக்கு இலங்கைப்படை உதவி

USSHopper

கடந்த மாதம் 29 ஆம் திகதி (29-09-2016) சுமார் 9:00 PM அளவில் இந்து சமுத்திரத்தில் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவின் கடற்படை கப்பலான USS Hopperஇல் ஒரு படையினருக்கு அவசர வைத்திய சேவை தேவைப்பட்டு இருந்தது. அப்போது அந்த கப்பல் இலங்கை கரையில் இருந்து சுமார் 265 km தொலைவில் இருந்தது. அத்துடன் இந்த கப்பலுக்கு வைத்திய சேவை வழங்க வேறு எந்த அமெரிக்க கப்பலும் அருகில் இருந்திருக்கவில்லை. இந்த கப்பலில் ஹெலியும் இருந்திருக்கவில்லை.
.
வேறு வழி எதுவும் அற்ரிருந்த அமெரிக்க கப்பலின் தளபதி இலங்கை கடல்படையின் உதவியை நாடியிருந்தார். இலங்கை கடற்படை உடனடியாக அக்கப்பலை இலங்கை கரை நோக்கி முடிந்த அளவு வேகமாக வரும்படி கூறி, அதேவேளை இலங்கை கடற்படையின் Dvora கப்பல்களையும் வேகமாக USS Hopper நோக்கி செலுத்தியது. மறுநாள் காலை 7:30 மணியளவில் Dvora அமெரிக்க படையினரை ஏற்றிக்கொண்டு திரும்பியது.
.
கொழும்பு எடுத்துவரப்பட்ட அமெரிக்க படையினர் கொழும்பு Asiri வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
.
USS Hopper தளபதி J. D. Gainey இந்த உதவியில் இலங்கைப்படை செயல்பட்ட வேகத்தை பாராட்டியதோடு, நன்றியும் தெரிவித்து உள்ளார்.
.

சுமார் 154 மீட்டர் நீளமான USS Hopper தரையில் இருந்து தரைக்கும், தரையில் இருந்து வானுக்குமான தாக்குதல்களை செய்யக்கூடியதுடன், நீர்மூழ்கிகளையும் தாக்கக்கூடியது. இதில் இரண்டு ஹெலிகள் நிலைகொள்ள முடியும் எனினும், சம்பவத்தின் போது ஹெலிகள் இருந்திருக்கவில்லை.
.