அமெரிக்க கப்பலோட்டிகளுக்கு இந்தியா 10 வருட சிறை

SeamanGuard

தமிழ்நாட்டு நீதிமன்றம் ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்ட கப்பல் ஒன்றின் அனைத்து பணியாளர்களுக்கும் 10 வருட சிறைத்தண்டனையை திங்கள்கிழமை விதித்துள்ளது. இந்த பணியாளர் குழு 3 உக்கிரேன் நாட்டவரையும், 14 எஸ்டோனியா நாட்டவரையும், 6 பிரித்தானியர்களையும், 10 இந்தியர்களையும் கொண்டிருந்தது.
.
ஒரு நாட்டின் எல்லைக்கு நுழையும் கப்பல்கள் தம்முடன் ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் குற்றமாகும். Seaman Guard என்ற அமெரிக்காவில் பதியப்பட்ட கப்பல் தம்மை கடல் கொள்ளையரிடமிருந்து பாதுகாக்க சில ஆயுதங்களை வைத்திருந்தனர். இந்த கப்பல் இந்திய கடல் எல்லையுள் சுமார் 2 வருடங்களின் முன் நுழைந்தபோது இந்தியா அவர்களை கைது செய்திருந்தது. இவர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10 வருட சிறையுடன் ஆளுக்கு $45 தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
.
இவ்விவகாரம் இந்தியாவுக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் இடையே சிறு இராசதந்திர போர்களை உண்டாக்கலாம்.
.
AdvanFort என்ற இந்த கப்பல் உரிமையாளர் தமது ஆயுதங்கள் சட்டப்படி கொள்வனவு செய்யப்பட்டவையே என்றுள்ளனர்.
.

இந்த பணியாளர்கள் ஏற்கனேவே 9 மாதங்கள் சிறையில் இருந்துள்ளனர். அதன் பின்னரே அவர்கள் பிணையில் சென்றுள்ளனர்.