அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா போட்டி

KamalaHarris

2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் Democratic கட்சி சார்பில் போட்டியிட முன்வந்துள்ளார் கமலா ஹாரிஸ் (Kamala Harris) என்ற அமெரிக்க பெண். 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவரின் தாயார் சியாமளா கோபாலன் ஒரு இந்திய தமிழர், தந்தையார் Donald Harris (Stanford University professor) ஒரு அமெரிக்கன் ஜமேய்க்கர் (Jamaican).
.
கமலாவின் 7 ஆவது வயதில் பெற்றார் விவாகரத்து பெற்றனர். அப்போது தாயார் சியாமளாவுடன் கமலா கனடாவின் மொன்றியல் நகர் சென்று வாழ்ந்தார். அந்நகரின் McGill University யில் தாயார் சியாமளா விரிவுரைகள் செய்துள்ளார். பின்னர் கமலா ஹாரிஸ் அமெரிக்கா மீண்டுள்ளார்.
.
2004 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கமலா San Francisco நகரின் district attorney ஆக கடமை புரிந்தவர். 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை கலிபோர்னியா மாநிலத்தின் attorney general ஆகவும் கடமை புரிந்திருந்தார். அவரே அந்த பதவியை கொண்டிருந்த முதல் வெள்ளையர் அல்லாத பெண்.
.
இவருடன் மேலும் 4 பேர் Democratic கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார். முதலில் Democratic மற்றும் Republican கட்சிகளின் உள்ளே உட்கட்சி தேர்தல் இடம்பெறும். உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறுவோர் இறுதி தேர்தலில் போட்டியிடுவார்.
.
அமெரிக்காவின் 2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் அந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறும்.

.