அமெரிக்க தூதரை வெளியேற்ற குவிந்த 70,000 கையெழுத்து 

அமெரிக்க தூதரை வெளியேற்ற குவிந்த 70,000 கையெழுத்து 

கனடாவில் இருந்து Pete Hoekstra என்ற கனடாவுக்கான அமெரிக்க தூதுவரை வெளியேற்ற ஆதரவு தேடும் இணைய மூல பணிக்கு (online petition) புதன்கிழமை மாலை வரையில் 70,000 கையெழுத்துக்கள் கிடைத்துள்ளன.

Lee Walker என்ற Calgary நகர பெண் ஆரம்பித்த இந்த திட்டம் வரும் மாதங்களில் கனடிய பாராளுமன்றத்தில் Green Party தலைவி Elizabeth May மூலம் முன்வைக்கப்படும். 

கனடாவை அவமதிக்கும் அமெரிக்க சனாதிபதி ரம்பின் கூற்றுக்களை Hoekstra கனடாவில் பரப்புவதாலேயே அவரை வெளியேற்ற கேட்கப்படுகிறது. குறிப்பாக கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம் என்ற ரம்பின் கூற்றை Hoekstra மீண்டும், மீண்டும் கூறி வருகிறார்.

ரம்புக்கு அடிபணிந்து தனது ஆட்சியை பாதுகாக்க விரும்பும் கனடிய பிரதமர் கார்னி தூதுவரை வெளியேற்றும் திட்டத்தை முன் எடுப்பது சந்தேகமே.