அமெரிக்க நிறுவனத்தின் LNG திட்டம் முறியலாம்

அமெரிக்க நிறுவனத்தின் LNG திட்டம் முறியலாம்

அமெரிக்காவின் NewFortress நிறுவனம் இலங்கையில் அமைக்கவிருந்த LNG எரிவாயு திட்டம் முறியலாம் என்று கூறப்படுகிறது. எதிர்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கூட்டணியின் கட்சிகள் சிலவும் கூடவே மேற்படி திட்டத்தை எதிர்க்கின்றனர். தொழிலாளர் சங்கங்களும் எதிர்க்கின்றன.

சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியும், JVPயும் இந்த திட்டத்துக்கு வன்மையான எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தாம் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்ட ஒப்பந்தங்களை கைவிடுவோம் என்று கூறியுள்ளார் சஜித் பிரேமதாச. NewFortress இந்த மிரட்டலை விரும்பவில்லை.

சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் நிலைமையை சாதகமாக கையாள திட்டம் ஒன்றை NewFortress கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அதன் முதலீடுகள் அழியலாம்.

அதேவேளை NewFortress நேரடியாக இந்த திட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றும், பதிலுக்கு NFE Sri Lanka Power Holding LLC என்ற பினாமி நிறுவனமே கையொப்பம் இட்டது என்றும் JVP தலைவர் அனுரா குமார கூறியுள்ளார்.

மேற்படி திட்டத்தில் சுமார் 310 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் Yugadanavi Power Plant நிறுவனத்தின் Kerawalapitya மின் உற்பத்தியும், புதிதாக அமைக்கப்படவுள்ள 700 மெகாவாட் நிறுவனத்தின் உரிமையும் NewFortress நிறுவதின் கைகளுக்கு செல்ல இருந்தன.

செப்டம்பர் மாதம் 17ம் திகதி இரவு 12:06 மணிக்கு இந்த திட்டம் கையொப்பம் இடப்பட்டதால் இதை சிலர் midnight deal என்று அழைக்கின்றனர். இரவு 12:06 மணிக்கு
கையொப்பம் இட்ட அமெரிக்க அதிகாரிகள் அதிகாலை 2:00 மணிக்கு இலங்கையை விட்டு வெளியேறி இருந்தனர்.