அமெரிக்க பங்கு சந்தைகளை விட்டு வெளியேறும் சீன நிறுவனங்கள்

StockMarket

கடந்த காலங்களில் சீனாவின் பெரிய நிறுவங்கள் அமெரிக்காவின் பங்கு சந்தைகளில் தமது பங்குகளை விற்பனை செய்து வந்துள்ளன. பெருமளவு பணமுள்ள அமெரிக்கர் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனங்களில் முதலீடுகளை செய்து பெரும் இலாபம் அடைய இது வழி செய்தது.
.
ஆனால் தற்போது அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனாவுடன் முரண்பட்டு வருவதால், சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் New York Stock Exchange, NASDAQ போன்ற பங்கு சந்தைகளில் இருந்து ஹாங் காங் பங்கு சந்தைக்கு (Hong Kong Stock Exchange) மெதுவாக நகர ஆரம்பித்து உள்ளன. குறிப்பாக அமெரிக்கா நடைமுறை செய்யவுள்ள Holding Foreign Companies Accountable Act. சீன நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முனைவதே சீன நிறுவனங்கள் வெளியேற காரணமாகிறது.
.
தற்போது அமெரிக்கர் சுமார் $1.3 டிரில்லியன் பணத்தை சீன நிறுவங்களில், அமெரிக்க பங்கு சந்தைகள் மூலம், முதலீடு செய்துள்ளனர்.
.
சீனாவின் Alibaba என்ற நிறுவனம் கடந்த மாதம் $12.9 பெறுமதியான பங்குகளை ஹாங் காங் பங்கு சந்தையில் விற்பனை செய்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்  இந்த நிறுவனம் ஹாங் காங் சந்தையை புறக்கணித்து, நியூ யார்க் சந்தையில் $25 பில்லியன் பெறுமதியான IPO பங்குகளை விற்பனை செய்து இருந்தது.
.
தற்போது அமெரிக்காவில் $77.2 பில்லியன் பெறுமதியான பங்குகளை கொண்டுள்ள சீனாவின் JD.com நிறுவனம் கடந்த கிழமை $4.1 பில்லியன் பங்குகளை ஹாங் காங் சந்தையில் விற்பனை செய்துள்ளது.
.
அமெரிக்காவின் KFC, Pizza Hut போன்ற நிறுவனங்களை இயக்கும் Yum China சென்ற சீன நிறுவனமும் ஹாங் காங் சந்தைக்கு நகர நடவடிக்கை எடுத்துள்ளது. Yum China தற்போது அமெரிக்காவில் $16.8 பில்லியன் பெறுமதியான பங்குகளை கொண்டுள்ளது.
.
சுமார் $38 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பங்குகளை கொண்டுள்ள சீனாவின் Baidu நிறுவனமும் ஹாங் காங் நகர ஆரம்பித்து உள்ளது.
.