Federal Reserve என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் மத்திய வங்கி தலைவர் (Chairman) Jerome Powell மீது அமெரிக்க சனாதிபதி ரம்ப் criminal விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தனது விருப்பத்துக்கு ஏற்ப Powell மத்திய வங்கியின் வரி வீதத்தை குறைக்கவில்லை என்பதால் ரம்ப் Powell மீது கடுமையான மூர்க்கம் கொண்டிருந்தார்.
ஆனால் அரசியல் தலையீடு இன்றி பொருளாதார கணிப்புக்களுக்கு ஏற்பவே மத்திய வங்கியின் வரி வீதம் தீர்மானிக்கப்படும் என்று Powell ரம்பின் வேண்டுகோளுக்கு மறுப்பு கூறியுள்ளார்.
மூர்க்கம் அடைந்த ரம்ப் மத்திய வங்கியின் வாஷிங்டன் தலைமையகத்தை Powell $2.5 பில்லியன் செலவில் புனரமைப்பு செய்ததில் criminal குற்றம் காண முயற்சிக்கிறார்.
அமெரிக்க டாலரின் நம்பகத்தன்மை வீழ்ச்சி அடைவதால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது $4,600 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
