அமெரிக்க F-35 யுத்த விமானத்தை ஈரான் சுட்டது, சீனாவின் கைவரிசை?

அமெரிக்க F-35 யுத்த விமானத்தை ஈரான் சுட்டது, சீனாவின் கைவரிசை?

வியாழன் ஈரான் மீது தாக்குதல் செய்ய சென்ற அமெரிக்காவின் அதி நவீன யுத்த விமானமான F-35 ஒன்று ஈரான் செய்த தாக்குதல் காரணமாக அவசரமாக அமெரிக்க நட்பு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தரை இறக்கப்பட்டுள்ளது.

இந்த F-35 யுத்த விமானம் 5ம் சந்ததி stealth (எதிரியின் கண்களில் அகப்படாது மறைந்து பறக்கக்கூடிய) யுத்த விமானம் ஒன்று சுமார் $100 மில்லியன் பெறுமதியானது.

2006ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த இந்த விமானம் இம்முறையே முதல் தடவையாக எதிரி நாடு ஒன்றால் சுடப்பட்டு உள்ளது.

இந்த விமானத்தின் stealth தொழில்நுட்பம் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஈரான் தன்னால் F-35 விமானங்களின் பறப்பை காண முடியும் என்று இதுவரை அறிவிக்கவில்லை. சீனாவும், ரஷ்யாவும் மட்டுமே தம்மால் F-35 வருவதை அறிய முடியும் என்று கூறி இருந்தன. ஈரானுக்கு மேற்படி விமானத்தின் வருகையை காட்டிக்கொடுத்தது யார்?

சீனா தனது பல இராணுவ தொழில்நுட்பங்களை உண்மையான யுத்தம் ஒன்றி பரிசோதனை செய்யும் வாய்ப்பை இதுவரை கொண்டிருக்கவில்லை. காரணம் சீனா நீண்ட காலமாக யுத்தம் எதற்கும் செலவில்லை.

ஈரான் யுத்தத்தில் சீனா தனது பல்வேறு தொழில்நுட்பங்களை பரிசோதனை செய்ய முனையலாம் என்று கருதப்படுகிறது.

அண்மையில் இந்தியாவுடனான யுத்தத்தில் சீனாவின் நவீன யுத்த விமானங்களை பயன்படுத்திய பாகிஸ்தான் சில இந்திய Rafael யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தி இருந்தன. இந்த யுத்தத்தில் தம்மை அண்மித்து வரும் சீனாவின் J-10 யுத்த விமானங்களை இந்தியாவின் Rafael அறிந்திருக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.