அமெரிக்க Governor போட்டியில் இலங்கை தமிழ் பெண்

Maryland

அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) என்ற மாநிலத்து Governor தேர்தல் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் இலங்கை வம்சம் வந்த கிரிஷாந்தி விக்கினராசா (Krishanti Vignarajah) என்ற தமிழ் பெண்ணும் போட்டியிடுகிறார்.
.
ஒபாமாவின் மனைவி Michelle Obama அமெரிக்காவின் first lady ஆக இருந்தபோது கிரிஷாந்தி policy director ஆக சுமார் 2 வருடங்கள் கடமை புரிந்தவர். இவர் அமெரிக்காவின் State Department பதவியையும் கொண்டிருந்தவர். அதற்கு முன்னர் சிக்காகோ சட்ட நிறுவனம் ஒன்றிலும் இவர் கடமையாற்றி இருந்தார்.
.
கிரிஷாந்தி Yale பல்கலைக்கழகம், Yale Law School ஆகியவற்றில் பயின்றவர்.
.
தற்போது பதிவில் இருக்கும் Republican கட்சியை சார்ந்த Larry Hogan என்பவரை பதிவில் இருந்து விளக்கும் நோக்கிலேயே இவர் போட்டியிடுகிறார். Republican கட்சி சார்பில் Hogan மட்டுமே போட்டியிடுகிறார். ஆனால் Democratic கட்சி சார்பில் பலர் போட்டியிடுகின்றனர். அதில் ஒருவரே கிரிஷாந்தி.
.

அமெரிக்க மாநில Governor நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுபவர். ஒரே கட்சியை சார்ந்த பலரும் போட்டியிடலாம்.
.