அமெரிக்காவின் பல மாநிலங்களை வெள்ளி முதல் தாக்கிய winter/snow புயலால் சுமார் 19,000 விமான சேவைகள் நிறுத்தப்பட்டு (cancel) உள்ளன. மொத்தம் 18 மாநிலங்களில் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக snow விழுந்துள்ளது.
இந்த புயலுக்கு அமெரிக்காவில் குறைந்தது 12 பேர் பலியாகியும் உள்ளனர். நியூ யார்க் நகரில் மட்டும் 7 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது சுமார் 800,000 அமெரிக்க வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. மரங்கள், மின்கம்பங்கள், மின் இணைப்புகளில் பெருமளவு பனிக்கட்டி படிவதால் அவை முறிந்து விழுகின்றன.
இன்று திங்கள் Minnesota மாநிலத்து Duluth நகரில் காற்றின் தாக்கத்துடன் கூடிய வெப்பநிலை -40C ஆக இருந்துள்ளது.
இந்த புயலுக்கு கனடாவின் கிழக்கு பகுதியும் பாதிப்புக்கு உள்ளாகியது. Toronto நகரின் சில இடங்களில் 45 cm உயரத்துக்கு snow வீழ்ச்சி கிடைத்துள்ளது.
ஜனவரி மாதம் Toronto நகருக்கு கிடைத்த மொத்த snow 88.2 cm ஆக உள்ளது. 1937ம் ஆண்டுக்கு பின் ஜனவரி மாதத்தில் கிடைத்த அதிக snow இதுவே.
Toronto விமான நிலையத்தில் 46 cm snow விழுந்து உள்ளது.
