அம்பாந்தோட்டையில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு 

அம்பாந்தோட்டையில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு 

சீனாவின் Sinopec (China Petroleum & Chemical Corporation) என்ற எண்ணெய் வள மற்றும் எரிபொருள் நிறுவனம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகே மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. அதற்கான ஆய்வுகளை தற்போது Sinopec செய்கிறது.

இங்கே Sinopec இரண்டு 100,000 bpd (barrels per day) அல்லது ஒரு 160,000 bpd சுத்திகரிப்பு வசதி கொண்ட முறையே இரண்டு ஆலைகளை அல்லது ஒரு ஆலையை கட்டும்.

1960ம் ஆண்டுகளில் ஈரானின் உதவியுடன் இலங்கையில் நிறுவப்பட்ட தற்போது இயங்கும் இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாள் ஒன்றில் 38,000 பரல் எண்ணெய்யை மட்டுமே சுத்திகரிக்கும் வசதி கொண்டது. புதிய Sinopec நிலையம் 4 அல்லது 5 மடங்கு எண்ணெய்யை தினமும் சுத்திகரிக்கும்.

அம்பாந்தோட்டை Sinopec சுத்திகரிப்பு நடைமுறைக்கு வந்தால் இதுவே சீனாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சீன எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆக அமையும்.

Sinopec ஏற்கனவே $100 மில்லியன் செலவிட்டு எரிபொருள் விற்பனை நிலையங்களை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

அதேவேளை இந்திய அங்கு சுத்திகரித்த எண்ணெய்யை நாகபட்டினத்தில் இருந்து திருகோணமலைக்கு குழாய் மூலம் எதுவரை முயற்சிக்கிறது.