அரசர் தடுத்தார் இளவரசி அரசியலை

Ubolratana

நேற்று தாய்லாந்தின் முன்னாள் இளவரசி எதிர்கட்சி கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி இருந்தார். இதனால் மிரண்ட இராணுவ சார்பு கட்சி இராணுவ சார்பு அரசரை நாட, அவரும் முன்னாள் இளவரசி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்துள்ளார். இது தொடர்பாக இளவரசி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை.
.
சாதாரண அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்ததால் தாய்லாந்து அரச அதிகாரத்தை இழந்த 67 வயதுடைய முன்னாள் இளவரசி, சாதாரண ஒரு பிரசைக்கு உள்ள உரிமைப்படி தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறியிருந்தார். ஆனால் அதை அவரது 66 வயதுடைய சகோதரரும், அரசருமான Maha Vajiralongkorn தடுக்கிறார்.
.
போட்டியில் இருந்து விலகினாலும், தொடர்ந்தும் எதிர்க்கட்சி சார்பில் பரப்புரைகள் செய்வாரா என்பதை அவர் இதுவரை கூறவில்லை. முன்னாள் இளவரசி எதிர்க்கட்சி சார்பில் பரப்புரைகள் செய்வதையும் இராணுவமும், அது சார்ந்த அரசரும் நிராகரிக்கக்கூடும்.
.
மேற்படி இளவரசியின் 3 பிள்ளைகளுள் ஒருவர் 2004 சுனாமிக்கு பலியாகி இருந்தார்.
.
எதிர்க்கட்சி சார்பில் முன்னாளில் பிரதமராக இருந்த Thaksin Shinawatra வும், பின்னர் பிரதமராக இருந்த அவரின் சகோதரி Yingluck Shinawatra வும் தற்போது வெளிநாடுகளில் மறைந்து வாழ்கிறார்கள். இவர்கள் நாடு திருப்புவதையும், அரசியலில் பங்கு கொள்வதையும் இராணுவம் தடை செய்துள்ளது.

.