அரச தகவல்களால் அரசியல்வாதிகள் பங்கு சந்தை இலாபம்

USFlag

பொதுவாக இரகசியங்கள், இரகசிய தரவுகள் என்பன பொதுமக்களுக்கு கிடைக்க முன்னர் அரசியல்வாதிகளுக்கே கிடைக்கும். ஆனால் அவ்வகை தரவுகளை பயன்படுத்தி அரசியவாதிகள் இலாபம் அடைவது குற்றம். அமெரிக்காவின் சட்டங்களும் அவ்வாறு காங்கிரஸ் உறுப்பினர் தமக்கு கிடைக்கும் அரச தவுகளை பயன்படுத்தி முதலீடுகள் மூலம் இலாபம் அடைவதை தடுக்கின்றன.
.
அவ்வாறு சட்டம் இருப்பினும் குறைந்தது 4 அமெரிக்க செனட்டர்கள் (senators) தமக்கு கிடைத்த கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளின் அடிப்படியில் தமது பங்குச்சந்தை பங்குகளை உடனடியாக விற்று தமது பல மில்லியன் நட்டங்களை தவிர்த்து உள்ளனர். அவர்கள் தமது பங்குகளை விற்பனை செய்ததின் பின்னான சில நாடகளில் அமெரிக்க பங்குகள் 30% முதல் 40% தமது பெறுமதியை இழந்து உள்ளன.
.
Richard Burr என்ற செனட்டர் (North Carolina மாநிலத்து Republican கட்சியினர்) சுமார் $1.7 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை கடந்த மாதம் தீரென விற்பனை செய்துள்ளார். இவர் அமெரிக்க Senate Intelligence Committee யின் chairman ஆவார்.
.
Kelly Loeffler என்ற செனட்டர் (Georgia மாநிலத்து Republican கட்சியினர்) $3 மில்லியன் பெறுமதியான தனது பங்குகளை வைரஸ் தவுகள் கிடைத்த அன்றே விற்பனை செய்துள்ளார். இவர் அமெரிக்க Senate Health Committee உறுப்பினர் ஒருவர். இவரின் கணவர் New York Stock Exchange பங்கு சந்தையின் chairman ஆவார். சுமார் 3 கிழமைகளுக்குள் இவர் 27 பங்குச்சந்தை விற்பனைகளை செய்துள்ளார்.
.
கலிபோனியா மாநிலத்து Democratic கட்சியினரான செனட்டர் Dianne Feinstein என்பவரின் கணவரும் சுமார் $6 மில்லியன் பங்குகளை மேற்படி காலத்தில் விற்பனை செய்துள்ளார்.
.
அமெரிக்காவின் National Public Radio (www.npr.org) இந்த தவுகளை சட்டப்படி பெற்றுள்ளது. இது அமெரிக்காவில் இயங்கும் இலாப நோக்கம் அற்ற செய்தி நிறுவனமாகும்.
.