இந்தியா, பிரித்தானியா போன்ற சில நாடுகள் அமெரிக்க சனாதிபதி ரம்பின் மிகையான வரிகளில் இருந்து தம்மை விடுவிக்க ரம்புடன் அவசரப்பட்டு இணக்கங்களை செய்து கொண்டன. ஆனால் ரம்பின் வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ள நிலையில் மேற்படி இணக்கங்கள் இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு பாதகமாக அமைகின்றன.
பாதகமாக அமையும் இணக்கங்களில் இருந்து வெளியேறினால் அந்த நாடுகளை கடுமையாக தண்டிப்பேன் என்று மிரட்டுகிறார் ரம்ப்.
உதாரணமாக இந்தியாவின் மோதி அரசு ரம்ப் இந்தியா மீது திணித்து இருந்த 50% வரியை 18% வாரியாக குறைக்க இணக்கம் ஒன்றை செய்திருந்தது. இந்த இணக்கத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்தான எரிபொருள் இறக்குமதியை நிறுத்துவது, $500 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களை இந்தியா இறக்குமதி செய்வது போன்ற இந்தியாவுக்கு பாதகமான தீர்மானங்களும் உண்டு.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுக்கள் தற்போது கால வரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளது. அதனால் ரம்ப் மூர்க்கம் கொண்டுள்ளார்.
