அஸ்ரேலியாவில் 11 யூதர்கள் சுட்டு கொலை 

அஸ்ரேலியாவில் 11 யூதர்கள் சுட்டு கொலை 

அஸ்ரேலியாவின் சிட்னி பகுதியில் உள்ள Bondi Beach என்ற கடற்கரையில் யூதர்களின் Hanukkah நிகழ்வை கொண்டாடிய யூதர்களில் 11 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். 

இந்த கடற்கரை நிகழ்வு ஞாயிறு மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி இருந்தது. துப்பாக்கி தாக்குதல் இரவு 9:30 மணியளவில் இடம்பெற்றது.

சுட்டவரில் ஒருவரும் பலியாகி உள்ளார். இன்னொருவர் வைத்தியசாலையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கிருந்த கார் ஒன்றில் சில வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அவை தற்போது போலீசாரால் அகற்றப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.