ஆகஸ்ட் 9 முதல் அமெரிக்க-கனடா எல்லை திறப்பு

ஆகஸ்ட் 9 முதல் அமெரிக்க-கனடா எல்லை திறப்பு

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான எல்லையை முற்றாக கரோனா தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி 12:01 மணி முதல் தடையின்றி திறக்க கனடா தீர்மானித்து உள்ளது. இந்த அறிவிப்பை கனடிய அரசு இன்று தெரிவித்து உள்ளது.

முற்றாக கரோனா தடுப்பு மருந்து பெற்ற எனைய நாட்டவர் செப்டெம்பர் மாதம் 7ம் திகதி முதல் கனடாவுள் தடையின்று நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கனடாவில் அனுமதி பெற்ற தடுப்பு மருந்துகளே (Pfizer, Moderna, AstraZeneca, Johnson & Johnson) தற்போது ஏற்றுக்கொள்ளப்படும். ரஷ்ய, சீன, இந்திய மருந்துகள் ஏற்றுக்கொள்ளப்படா. அத்துடன் ஆதாரம் ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சு மொழியில் இருத்தலும் அவசியம்.

தடுப்பு மருந்து பெற்ற விபரங்கள் பயணத்தின் முன் ArriveCAN இணையத்தில் பதிவு செய்யப்படல் அவசியம். நில கடவை மூலம் கடப்போருக்கான வழிமுறைகள் மேலும் மாற்றம் அடையலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 9ம் திகதி முதல் Halifax, Quebec City, Ottawa, Winnipeg, Edmonton ஆகிய நகர விமான நிலையங்களும் வெளிநாட்டு விமானங்களை அனுமதிக்கும். சுமார் 17 மாதங்களின் பின் இவை வெளிநாட்டு விமானங்களை அனுமதிக்க உள்ளன.

முற்றாக தடுப்பு மருந்து பெறாதோர் தொடர்ந்தும் 14 தினங்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

அமெரிக்கா இந்த புதிய மாற்றம் தொடர்பாக அறிவித்தல் எதையும் இதுவரை செய்திருக்கவில்லை.