ஆட்டம் காணும் பைடெனுக்கு உதவ வந்த ஒபாமா, கிளின்டன்

ஆட்டம் காணும் பைடெனுக்கு உதவ வந்த ஒபாமா, கிளின்டன்

தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடென் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் ரம்பிடம் தோல்வி அடையலாம் என்ற பயம் கொண்ட பைடென் தரப்பு முன்னாள் Democratic கட்சி சனாதிபதிகளான ஒபாமாவையும் (Obama), கிளின்டனையும் (Bill Clinton) பிரசாரத்துக்கு அழைத்துள்ளது.

நியூ யார்க் நகரத்து Radio City Music மண்டபத்தில் வியாழன் இடம்பெற்ற பைடென் பிரச்சார நிகழ்வில் ஒபாமாவும், கிளின்டனும் பைடெனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இந்த நிகழ்வு $25 மில்லியன் பணத்தை திரட்டியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 5,000 பேர் பங்கு கொண்டதாகவும் அனுமதி கட்டணங்கள் $250 முதல் $500,000 வரையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெருமளவு பணம் செலுத்தியோர் கூடவே 3 சனாதிபதிகளுடனும் நின்று புகைப்படம் எடுக்கவும் அனுமதி பெற்றனர்.

இந்த கூட்டத்தை குறைந்தது 3 தடவைகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழப்பி உள்ளனர். காசா யுத்தத்தை பைடென் நிறுத்தாதலால் “Shame on you, Joe Biden” என்று கோஷமிட்டுள்ளனர்.