ஆட்டம் காண்கிறது நெல்சன் மண்டேலா கட்சி

ANC

தென் ஆபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக போராடி அந்நாட்டை சுதந்திரம் அடைய செய்தவர்களில் முக்கியமானவர் மறைந்த நெல்சன் மண்டேலா (Nelson Mandela). அவர் ஆரம்பித்த கட்சியே African National Congress (ANC). இன்று அங்கு நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் ANC வரலாற்றில் அதிகுறைந்த ஆதரவை, சுமார் 54%, பெற்றுள்ளது.
.
1994 ஆம் ஆண்டு முதல் ANC 60% க்கும் மேற்பட்ட ஆதரவை பெற்று வந்துள்ளது. ஆனால் அண்மை காலங்களில் ANC உறுப்பினர்களின் ஊழல், அதி உயர் வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்களால் ANC மீதான ஆதரவு வீழ்ச்சி அடைய ஆரம்பித்து உள்ளது. தற்போது தென் ஆபிரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 27% ஆக உள்ளது. அந்நாட்டின் இவ்வருட பொருளாதார வளர்ச்சியும் 0% ஆக மட்டுமே இருக்கிறது.
.
ANC கட்சிக்கு பதிலாக Democratic Alliance (DA) என்ற கட்சி மீதான ஆதரவு அதிகரித்து வருகின்றது. சில நகரசபைகளை DA கைப்பற்றியும் உள்ளது. Nelson Mandela Bay என்ற இடத்தில் DA 46.5% வாக்குகளை பெற்று இருக்கையில், ANC 41% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
.

DA ஆதியில் வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்றாலும், தற்போது அதன் தலைமை Mmusi Maimane என்ற ஒரு கருப்பு இனத்தவரே.
.