ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம் 

இந்தியா மீண்டும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகத்தை அமைக்க முன்வந்துள்ளது. ஆப்கான் தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சர் Mawlawi Amir Khan Muttaqi இந்தியாவுக்கு பயணம் செய்த வேளையிலேயே இந்தியா இந்த அறிவிப்பை செய்துள்ளது.

முன்னர் இந்தியா தலிபானுக்கு எதிரான, அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியில் இருந்த அரசையே ஆதரித்து வந்தது. ஆனால் அமெரிக்கா 2021ம் ஆண்டு தனது படைகளை திடீரென பின்வாங்க, அமெரிக்க ஆதரவு அரசு கூடவே தப்பி ஓட, தலிபான் ஆட்சியை அமைத்தது. அப்போது இந்தியா தனது ஆப்கான் தூதரகத்தை மூடி இருந்தது.

ஏற்கனவே ரஷ்யா, சீனா, ஈரான், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் காபூலில் தமது தூதரகங்களை தூதரகங்களை கொண்டுள்ளன. மேற்கு நாடுகள் கூட்டாக தலிபான் அரசு மீது தடை விதித்துள்ளன.

2022ம் ஆண்டு முதல் இந்தியா காபூலில் ஒரு சிறிய அலுவலகத்தை ஆரம்பித்து இருந்தது. அதையே தற்போது இந்தியா தூதரகமாக தரம் உயர்த்தி உள்ளது. ஆப்கானும் டெல்லியில் தனது தூதரகத்தை ஆரம்பிக்கும்.

எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்பதுபோல் தலபானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது முறுகல் நிலை தோன்றியதும் இந்தியா தலிபான் பக்கம் சாய காரணமாக இருக்கலாம்.