ஆப்கானிஸ்தான் இலஞ்ச தொகை $3.9 பில்லியன்

2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட மொத்த தொகை US$ 3.9 என்கிறது UN அறிக்கை ஒன்று. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தின் இரண்டு மடங்கு எனப்படுகிறது. இலஞ்சம் கொடுப்பதை வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள் பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மக்கள். இங்கு அதிகம் இலஞ்சம் பெறுவது நீதிபதிகளும், அரச சட்டத்துரையினருமே. இவர்கள் பெறும் சராசரி இலஞ்சம் சுமார் $300. வைத்திய துறையினர் சராசரி $100 பெறுகின்றனர்.

இலஞ்சம் காரணமாக கடந்த கார்த்திகை மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தமது $25 மில்லியன் உதவியை இடைநிறுத்தி இருந்தது.

ஆப்கானிஸ்தானில் வேலை இல்லாதோர் தொகை 35%.