ஆப்கானிஸ்தான் வைத்தியசாலை தாக்குதலுக்கு 16 பேர் பலி

Afhanistan

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள Dasht-e-Barchi என்ற பிரசவ வைத்தியசாலையில் செவ்வாய் இடம்பெற்ற துப்பாக்கிதாரர்களின் தாக்குதலுக்கு குறைந்தது 16 பேர் பலியாகி உள்ளனர். அதில் உடன் பிறந்த குழந்தைகளும், அவர்களின் தாய்மாரும் அடங்குவர்.
.
மேற்படி தாக்குதலின் பின்னர் Nangarhar மாநிலத்தில் இடம்பெற்ற இன்னோர் தாக்குதலுக்கு மேலும் 24 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர்.
.
மேற்படி வைத்தியசாலை Doctors Without Borders அமைப்பால் நடாத்தப்படுவது.
.
மேற்படி இரண்டு தாக்குதல்களுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தலிபான் கூறி உள்ளது.
.
அமெரிக்க சனாதிபதி ரம்ப் தாலிபானுடன் உடன்படிக்கைகளை செய்து விரைவாக அமெரிக்க படைகளை அங்கிருந்து வெளியேற்ற முனைகிறார். அவ்வாறு செய்வது நவம்பர் மாதம் நிகழவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் தனக்கு ஆராதவை திரட்டும் என்று அவர் கருதுகிறார். ஆனால் தலிபான் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தான் அரசுடன் முரண்டு வருகிறது.
.