ஆப்கான் வழக்கை தொடர ICC தீர்மானம்

ICC

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்த குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச நீதிமன்றம் (ICC) தீர்மானித்து உள்ளது. இந்த விசாரணை அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தான் படைகள், தலிபான் ஆகிய மூன்று தரப்புகளையும் உள்ளடக்கும். அதனால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா.
.
இதற்கு முன் இந்த வழக்கை தொடரலாமா என்பதை ஆராய்ந்த ICC நீதிபதி வழக்கு நடைமுறை சாத்தியம் அற்றது என்று கூறி விசாரணையை நிராகரித்து இருந்தார். ஆனால் அதை மீள பரிசீலனை செய்த நீதிபதி Piotr Hofmanski வழக்கை தொடர அனுமதி வழங்கி உள்ளார்.
.
இந்த தீர்மானத்தால் விசனம் கொண்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் Mike Pompeo இது ஒரு பொறுப்பற்ற அரசியல் அமைப்பின் செயல்பாடு என்று கூறியுள்ளார்.
.
யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் ஆப்கானிஸ்தான் ICC அமைப்பில் ஒரு அங்கம். அதனால் ICC விசாரணை சட்டப்படியானது.
.
அமெரிக்காவும் தலிபானும் யுத்த நிறுத்த இணக்கம் ஒன்றை செய்து சில தினங்களுக்கு உள்ளேயே ICC தனது விசாரணையை ஆரம்பிக்க தீர்மானித்து உள்ளது.
.