ஆய்வு வெளியீடுகளில் அமெரிக்காவை பின் தள்ளியது சீனா

ஆய்வு வெளியீடுகளில் அமெரிக்காவை பின் தள்ளியது சீனா

விஞ்ஞான ஆய்வு வெளியீடுகளில் அமெரிக்காவை முதல் தடவையாக சீனா பின்தள்ளி உள்ளது என்கிறது ஜப்பானின் National Institute of Science and Technology Policy (NISTEP) என்ற அமைப்பு.

உலகம் எங்கும் பல்லாயிரம் விஞ்ஞான ஆய்வு வெளியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் மிக தரமானவை பின் வரும் காலத்து ஆய்வுகளில் மேற்கோள் (citation) காட்டப்படும். முதல் ஆய்வின் தரம் உயர, அது மேற்கோள் காட்டப்படும் அளவும் அதிகரிக்கும்.

அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஆய்வுகளின் முதல் 1% ஆய்வுகள் விசேட மரியாதை கொண்டவை. அவ்வாறு மேற்கோள் காட்டப்பட்ட முதல் 1% ஆய்வுகளில் 27.2% ஆய்வுகள் தற்போது சீன ஆய்வுகளாக உள்ளன. அதேவேளை 24.9% ஆய்வுகளே அமெரிக்க ஆய்வுகளாக உள்ளன. அதனால் அமெரிக்கா முதல் தடவையாக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

மூன்றாம் இடத்தில் 5.5% ஆய்விகளை கொண்ட பிரித்தானியா உள்ளது.

இந்த கணிப்பீட்டுக்கு NISTEP அமைப்பு 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான தரவுகளை உள்ளடக்கியது.

சீனா ஆண்டு ஒன்றில் சுமார் 407,181 ஆய்வுகளை வெளியிடுகிறது. அமெரிக்கா சுமார் 293,434 ஆய்வுகளை வெளியிடுகிறது.

அண்மையில் சனாதிபதி பைடென் $200 பில்லியன் செலவில் Chips and Science Act என்ற திட்டத்தில் அமெரிக்காவின் ஆய்வுகளை ஊக்குவிக்க முனைந்துள்ளார்.