ஆர்ப்பாட்டங்கள் மத்தியில் நிருபமா பண விசாரணை புதைப்பு?

ஆர்ப்பாட்டங்கள் மத்தியில் நிருபமா பண விசாரணை புதைப்பு?

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் நிருபமா ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான பண விசாரணைகள் புதைத்து மறைக்கப்படுகின்றன என்று Pandora அறிக்கையை வெளியிட்ட International Consortium of Investigative Journalism (ICIJ) கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ICIJ இலங்கையின் முன்னாள் உதவி அமைச்சரும், முன்னாள் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான  நிருபமா ராஜபக்சவும் அவரின் தமிழ் கணவர் திருக்குமரன் நடேசனும் முகந்தெரியாத நிறுவனங்கள் மூலம் $18 மில்லியன் பணத்தை வெளிநாட்டுகளில் ஒளித்து வைத்துள்ளதாக கூறி இருந்தது.

பன்டோராவின் இன்னோர் அறிக்கை இவர்களிடம் 2011ம் ஆண்டு அளவில் $160 மில்லியன் இருந்ததாகவும் கூறியுள்ளது.

பன்டோரா பத்திரிகையின் பின்னர் கோத்தபாய அரசு மேற்படி விசயத்தை விசாரணை செய்வது போல் பாசாங்கு செய்திருந்தாலும், அண்மையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நேரத்தில் விசாரணையை இழுத்தடிக்கிறது என்கிறது ICIJ.

மேற்படி குடும்பத்தின் சொத்துக்கள் Dubai, Seychelles, St. Martin ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.