ஆர்மீனியா, அயபர்யான் மோதல்

Nagorno-Karabakh

சிரியாவில் நடப்பதுபோல் ஆர்மீனியாவுக்கும் அயபர்யானுக்கும் இடையில் ஒரு பினாமி யுத்தம் ஆரம்பித்துள்ளது. Cold War காலத்தில் USSRஇன் கட்டுப்பாடில் இருந்த ஆர்மீனியாவும் அயபர்யானும் USSR  உடைவின் பின் இரண்டு நாடுகள் ஆகின. ஆனால் ஆர்மீனியன் மக்களை பெருமளவில் கொண்ட Nagorno-Karabakh என்ற பகுதி அயபர்யானுள் அடங்கிவிட்டது. ஆர்மீனியாவின் இராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் அயபர்யானுள் உள்ள இந்த ஆர்மீனியார் அயபர்யான் இராணுவத்துடன் மோதி வந்துள்ளது.
.
கடந்த காலங்களில் இந்த மோதல் ஓய்வு அடைந்திருந்தாலும் அண்மைக்காலங்களில் மோதல்கள் மீண்டும் ஆரம்பமாகி உள்ளன. ரஷ்யாவின் ஆதரவு ஆர்மீனியாவுக்கும் துருக்கியின் ஆதரவு அயபர்யானுக்கும் கிடைக்கிறது. அதேவேளை ரஷ்யாவும் துருக்கியும் சிரியா விடயத்திலும் மோதிக்கொகின்றனர்.
.
இந்த யுத்தத்துக்கு இதுவரை சுமார் 30,000 உயிர்கள் பலியாகி உள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் இங்கு 75 பேர்வரை பலியாகி உள்ளனர்.
.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய Organization for Security and Cooperation in Europe’s (OSCE) மோதல்களை தவிர்க்கும்படியும் கேட்டுள்ளன.
.