ஆழம் அறியாது ஈரானில் காலை விட்டு முழிக்கிறார் ரம்ப்?

ஆழம் அறியாது ஈரானில் காலை விட்டு முழிக்கிறார் ரம்ப்?

அமெரிக்க சனாதிபதி ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கி அங்கும் ஒரு கைப்பொம்மை அரசு அமைக்கலாம் என்ற கனவுடன் பெப்ரவரி 28ம் திகதி ஆரம்பித்த யுத்தம் தற்போது 4வது கிழமையாக தொடர்கிறது. ரம்பின் அண்மைக்கால நடவடிக்கைகள், கூற்றுக்கள் அவர் ஈரானில் ஆழம் அறியாது காலை விட்டு முழிக்கிறார் என்று கருத வைக்கிறது.

ஈரான் ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மூடும் என்று ரம்ப் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆனால் ஈரான் இந்த ஒடுங்கிய கப்பல் பாதையை மூடி தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அந்த தடுப்பை முறியடிக்க முடியாது முழிக்கிறார் ரம்ப். உதவிக்கு வர NATO மறுத்துவிட்டது.

கடந்த சனிக்கிழமை ஈரான் ஹோர்முஸ் பாதையை 48 மணித்தியாலத்துள் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தியை முற்றாக அழிப்பேன் என்று சூளுரைத்திருந்தார்.

ஆனால் காலக்கெடு முடிவடைய, ஈரானும் செவி மடுக்காது இருக்க, ரம்ப் காலக்கெடுவை 5 தினங்களுக்கு நீடித்து உள்ளார். ஈரானுடன் தாம் செய்யும் பேச்சுவார்த்தைகள் நலமாக செல்வதே காரணம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தாம் ரம்புடன் பேச்சுக்களை செய்யவில்லை என்கிறது. ரம்பும் பொய், பிரட்டில் வல்லவர் என்பதை உலகம் அறியும்.

இறக்குமதி வரிகளை ஆரம்பிக்கலாம், நிறுத்தலாம், மீண்டும் மீண்டும் அதை செய்யலாம். ஆனால் சில யுத்தங்கள் அவ்வாறல்ல; அவற்றை வெற்றி அடைய வேண்டும், இல்லையேல் தப்பி ஓட வேண்டும். வியடனாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவுக்கு அதுவே நிகழ்ந்தது.