இந்தியாவின் விசா ஆலயங்கள்

இந்தியாவின் விசா ஆலயங்கள்

இந்தியாவில் 4 பிரபல விசா ஆலயங்கள் உள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளுக்கு தொழில் புரிய, அல்லது மேற்படிப்பை தொடர முனையும் இந்தியர் பெருமளவில் இந்த விசா ஆலயங்களுக்கு சென்று விசா வரம் வேண்டி வழிபடுகின்றனர்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹைராபாத்தில் (Hyderabad) உள்ள Chilkur Balaji ஆலயமும் மேற்படி விசா ஆலயங்களில் ஒன்று. இந்த நகரிலேயே Apple, Amazon, Google, Microsoft, Dell போன்ற பிரபல நிறுவனங்கள் தமது கிளைகளை கொண்டுள்ளன. இங்கு தொழில் புரியும் தொழில்நுட்ப துறை இந்தியரே பெருமளவில் Balaji விசா ஆலயம் செல்கின்றனர்.

பொதுவாக 25 முதல் 35 வயது உடையோரே விசா வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இவர் 11 தடவைகள் வலம் வருவார்களாம். அத்துடன் அங்கு வழிபாட்டுக்கு வந்திருக்கும் அடியார்க்கு விசா பக்தர்கள் தானமும் வழங்குவார்கள். கரோனாவுக்கு முன்னர் கிழமை ஒன்றுக்கு 75,000 முதல் 100,000 விசா வழிபாட்டாளர் Balaji ஆலயம் செல்வார்களாம்.

விசா வழிபாடு செய்வோர் கூடவே தமது கடவுசீட்டையும் (passport) வழிபாட்டில் வைத்திருப்பர்.

தலைநகர் டெல்ஹியில் உள்ள Wale Bajrangbali ஆலயத்தில் விசேட விசா வழிபாடுகளும் உண்டு.

புஞ்சாப் மாநிலத்தில் உள்ள Jalandhar நகரில் உள்ள Shaheed Baba Nihal Sigh Gurdwara வில் விசா வழிபாடு செய்வோர் சிறு விளையாட்டு விமானத்தையும் காணிக்கையாக வழங்குவர். அதற்கு ஏற்ப ஆலயத்தின் அருகே விளையாட்டு விமான கடைகளும் உண்டு.

2018-2019 கல்வி ஆண்டில் 1.1 மில்லியன் வெளிநாட்டவர் அமெரிக்காவில் கல்வி கற்றுள்ளனர். இவர்கள் சுமார் $44.7 பில்லியனை அங்கு செலவழித்த உள்ளனர். அதில் சுமார் 25% இந்திய மாணவரிடம் இருந்து கிடைத்துள்ளது.