இந்தியாவிலிருந்து அஸ்ரேலியா சென்றால் 5 ஆண்டு சிறை

இந்தியாவிலிருந்து அஸ்ரேலியா சென்றால் 5 ஆண்டு சிறை

இந்தியாவில் இருந்து அஸ்ரேலியா செல்வது குற்ற செயலாக நடைமுறை செய்யப்படவுள்ளது. அதன்படி அஸ்ரேலிய குடியுரிமை கொண்டோர் தமது நாடான அஸ்ரேலியாவுக்கு மீள முன்னான 14 தினங்களில் இந்தியா சென்று இருந்தால் அவர்கள் அஸ்ரேலியா சென்றவுடன் 5 ஆண்டுகள் சிறை செல்வதோடு, A$ 66,000 (சுமார் US$51,000) தண்டமும் செலுத்த நேரிடும்.

தற்போது சுமார் 9,000 அஸ்ரேலிய குடியுரிமை கொண்டோர் இந்தியாவில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 650 பேர் கரோனா தொற்றுக்கு சாதகமானவர்களாக கருதப்படுகிறது.

இந்த சட்டம் மே மாதம் 15ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின் இச்சட்டத்தை தொடர்வதா என்பது மீண்டும் பரிசீலனை செய்யப்படும்.

தனது நாட்டவர் நாடு திரும்புவதை அஸ்ரேலியா சட்டவிரோதமாக்குவது இதுவே முதல் தடவை.