இந்தியாவில் பிறந்த இலங்கையருக்கு இந்திய கடவுச்சீட்டு

இந்தியாவில் பிறந்த இலங்கையருக்கு இந்திய கடவுச்சீட்டு

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்ற தமிழ் பெற்றாருக்கு 1986ம் ஆண்டு பிறந்த கோகுலேஸ்வரன் என்ற மகனுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்க இந்தியாவை கேட்டுள்ளது Madras High Court.

1955ம் ஆண்டு Citizenship Act பிரிவு 3(1) இல் குறிப்பிட்டபடி 1955ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி வரை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் இந்திய குடியுரிமை கொண்டவர். அதன்படி 1986ம் ஆண்டு பிறந்த கோகுலேஸ்வரன் இந்திய கடவுச்சீட்டு பெறும் உரிமை கொண்டவர் என்கிறது Madras HC.

2024ம் ஆண்டு கோகுலேஸ்வரன் இந்திய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க அந்த விண்ணப்பத்தை இந்திய கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் நிராகரித்தனர். கோகுலேஸ்வரன் மீண்டும் சில தடவைகள் விண்ணப்பித்தாலும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதியில் அவர் நீதிமன்ற உதவியை நாடினார்.

இவரின் பெற்றார் 1983ம் ஆண்டு இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள். இவர்கள் திருச்சி அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.