இந்தியாவில் 4,000 வருட பழமையான ரதம்

Sinauli

இந்தியாவின் ASI (Archaeological Survey of India) சுமார் 4,000 வருட பழமையான மூன்று ரதங்கள், வாள், சிறு கத்தி, குடம் போன்ற பொருட்களை மீட்டுள்ளனர். புதுடில்லிக்கு வடக்கே, சுமார் 70 km தூரத்தில், உள்ள Sinauli என்ற கிராமத்திலேயே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
.
கடந்த 3 மாதங்களாக நடாத்திய அகழ்வுகளின் பின்னரே இவை மீட்கப்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டிலும் இப்பகுதியில் வேறுபல ஆதிக்குடிகளின் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
.
ASI அமைப்பின் அதிகாரி ஒருவர் இந்த கண்டெடுப்பு மொசப்பத்தேமியா, கிரேக்கம் போன்ற நாகரீகங்களுக்கு நிகரான நாகரீகம் இவ்விடத்தில் இருந்தமையை காட்டுகிறது என்றுள்ளார்.
.
இந்த பொருட்கள் எந்த நாகரீகத்துக்கு உடையது என்பதை கண்டறியும் முயற்சியில் அகழ்வாளர்கள் ஈடுபட்டுள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் இந்துநதி பள்ளத்தாக்கு நாகரீகத்தானது என்று அவர்கள் கருதவில்லை.
.
இப்பொருட்கள் மீட்கப்பட்ட இடம் மரணித்தோரின் புதைக்குழி பகுதி என்றும் கருதப்படுகிறது. அத்துடன் இங்கு புதைக்கப்பட்டோர் முக்கியத்துவம் கொண்டோராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.