இந்தியாவை ஆப்கானிஸ்தானுள் இழுக்கிறது அமெரிக்கா

Afhanistan

ஆப்கானித்தானில் தன்னுடன் செயல்பட இந்தியாவை இழுக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் Senate இவ்வாறு இந்தியாவை இழுக்க வேண்டியவற்றை செய்யுமாறு அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனுக்கு (Pentagon) கூறியுள்ளது.
.
Senate விடுத்த இந்த கட்டளை, 2018 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் (National Defence Authorization Act) உள்ளது.
.
ஆப்கானிஸ்தானை சோவித்யூனியன் ஆக்கிரமித்து இருந்த காலத்தில் அவர்களை விரட்ட ஆப்கானித்தானில் அமெரிக்கா வளர்த்து ஆயுத குழுவே முயாஹிடீன் (Mujahideen). அதுவே பின் தலபான் ஆகியது. அல்-கைடாவின் பின் தலபான் அமெரிக்காவின் எதிரியாக மாற, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா அணி தலபானை ஆதரிக்க முன்வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியாவை நாடியுள்ளது.
.