இந்தியா, சவுதி இடையே எண்ணெய் மோதல்

இந்தியா, சவுதி இடையே எண்ணெய் மோதல்

இந்தியாவுக்கும், சவுதிக்கும் இடையே எண்ணெய் கொள்வனவு விவகாரத்தில் மோதல் தோன்றி உள்ளது. அம்மோதல் இரு தரப்பையும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.

சவுதி சில தினங்களுக்கு முன் ஆசிய நாடுகளுக்கான தனது எண்ணெய் விலையை அதிகரித்து இருந்தது. அதனால் இந்தியா பரல் ஒன்றுக்கு சுமார் $1.80 அதிகமாக செலுத்தவேண்டிய நிலை தோன்றியது. சவுதியின் இந்த செயலால் இந்தியா விசனம் கொண்டது. உடனே இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை சவுதியில் இருந்து கொள்வனவு செய்யும் எண்ணெயின் அளவை குறைக்குமாறு பணித்தது.

அதன்படி அடுத்த மாதம் இந்தியா 36% ஆல் குறைந்த அளவிலான சவுதி எண்ணெய்யையே கொள்வனவு செய்யும்.

மறுபுறம் இந்திய சவுதி உட்பட மத்திய கிழக்கில் முழுமையாக தங்கி இராது புதிதாக வேறு பல நாடுகளில் இருந்து எணெய்யை கொள்வனவு செய்ய முனைவது சவுதிக்கு விசனத்தை உருவாக்கியுள்ளது. அதனாலேயே சவுதி இந்தியாவை தண்டிக்க முனைகிறது என்றும் கருதப்படுகிறது.

இந்தியா தற்போது அமெரிக்கா, நோர்வே போன்ற தூரத்து நாடுகளில் இருந்தும் எண்ணெய்யை கொள்வனவு செய்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அதிக எணெய்யை விற்பனை செய்த நாடு ஈராக். ஆனால் இந்த ஆண்டு அதிக எணெய்யை விற்பனை செய்யும் நாடு அமெரிக்கா.

இந்தியா சவுதிக்கு அண்மையில் உள்ளதால் சவுதி எண்ணெய்க்கான சுமைக்கூலியும் மிக குறைவு. அத்துடன் யுத்த காலங்களில் தூர இடத்து எண்ணெய் பெரும் பயணத்தடைகளையும் சந்திக்கும்.

அதிவேலை சீனா ஈரானிடம் இருந்து மலிவு விலையில் 25 ஆண்டுகளுக்கு எண்ணெய்யை கொள்வனவு செய்யவுள்ளது. மலிந்த எண்ணெய் விலை பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையும்.