இந்தியா-பாகிஸ்தான் தீர்வுக்கு டிரம்ப், மறுக்கும் இந்தியா

Kashmir

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முரண்பாடுகளை தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வந்துள்ளார். ஆனால் டிரம்பின் தலையீட்டை மறைமுகமாக நிராகரித்து உள்ளது இந்தியா.
.
இன்று அமெரிக்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதி நிக்கி ஹேலி (Nikki Haley) தனது கூற்றில் இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடுகளால் டிரம்ப் கவலை கொண்டுள்ளார் என்றும், டிரம்ப் நேரடியாகவே தலையிட்டு சமாதானத்தை உருவாக்க செயல்படுவார் என்றும் கூறியுள்ளார்.
.
இந்த கருத்துக்கு உடனடியாகவே மறைமுகமாக பதிலளித்த இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் இரண்டு நாடுகளும் நேரடியாக பேசி தீர்க்கப்படவேண்டியது என்றும் (bilateral), மூன்றாம் தரப்புக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளது.
.
முன்னைய அமெரிக்க ஜனாதிபதிகள் இந்தியா-பாகிஸ்தான் சமாதானத்தில் பொதுவாக தலையிடவில்லை. அத்துடன் மிக அண்மைய வரை இந்தியா அமெரிக்காவின் எதிரியாகவும், பாகிஸ்தான் நண்பனாகவும் இருந்து வந்தன.
.

இந்திய-அமெரிக்கரான நிக்கி ஹேலி, அமெரிக்காவில் இந்திய பெற்றாருக்கு பிறந்தவர். பிறப்பில் இவரின் பெயர் Nimrata Randhawa ஆகும். உண்மையில் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Rex Tillerson இவ்விடயத்தில் கருத்து தெரிவிப்பது முறை. ஆனால் அவருக்கு பதிலாக நிக்கி கருத்தை வெளியிட்டு உள்ளார்.
.