இந்தியா S-400 ஏவுகணை கொள்வனவு

S-400

ரஷ்யாவின் தயாரிப்பான S-400 ஏவுகணைகளை இந்தியா கொள்வனவு செய்ய இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. நிலத்தில் இருந்து வானத்துக்கு பாயும் இந்த ஏவுகணைகளை இந்தியா சுமார் $ 4.47 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்யும். கொள்வனவு செய்யப்படவுள்ள ஏவுகணைகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
.
கோவா நகரில் நடைபெறவுள்ள BRICS (Brazil, Russia, India, China, South Africa) மாநாட்டின் போது இந்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. BRICS அங்கத்துவ நாட்டு தலைவர்கள் மாநாட்டில் பங்குகொள்ள இந்தியா வரவுள்ளார்.
.
தற்போது ரஷ்யா மட்டுமே இந்த வகை ஏவுகணைகளை கொண்டுள்ளது. அதேவேளை சீனாவும் பல S-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
.

சுமார் 600 km தொலைவில் வரும் எதிரி விமானங்களை இந்த ஏவுகணை கண்டறிந்து சுமார் 17,000 km/sec வேகத்தில் சென்று அழிக்கும் வல்லமை கொண்டது.
.