இந்திய அமைச்சருக்கு ஒலிம்பிக்கில் எச்சரிக்கை

VijayGoel

இந்திய மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சர் Vijay Goel க்கு பிரேசிலில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
.
இந்த அமைச்சர் பெரும்தொகையான தனது பரிவாரங்களுடன் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முற்படுவதாகவும், காவலாளிகள் அவ்வாறு உரிய பத்திரம் இன்றி செல்வதை தடுக்க முனையும்போது அடாவடி செயல்களில் இறங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுள்ளது. இவருக்கு சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி இருந்தாலும், இவரின் பரிவாரங்களை எந்தவித அனுமதியும் இல்லை.
.
புதன் கிழமை இவரின் அனுமதியும் பறிக்கப்படவிருந்தது. அன்று இவரும், இவரின் பரிவாரங்களும் gymnastic போட்டி இடம்பெறும் பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைய முற்பட்டு உள்ளனர். Rio 2016 அதிகாரி Sarah Peterson தனது கடிதத்தில் “We have had multiple reports of your Minister for Sports trying to enter accredited areas at venues with unaccredited individuals” என்று எச்சரித்து உள்ளார். அந்த கடிதம் இவர்களை ‘aggressive and rude’ என்று கூறியுள்ளது.
.
இதுவரை அமெரிக்கா 39 பதக்கங்களையும், சீனா 31 பதக்கங்களையும், ஜப்பான் 22 பதக்கங்களையும், பிரித்தானிய 18 பதக்கங்களையும், ஆஸ்திரேலியா 16 பதக்கங்களையும் முன்னணி இடங்களை பிடித்துள்ளன. இந்தியா ஒரு பதக்கத்தைக்கூட இதுவரை வெற்றி கொள்ளவில்லை.
.