இந்திய ஆற்று பெருக்குக்கு CIA அணு உபகரணம் காரணம்?

இந்திய ஆற்று பெருக்குக்கு CIA அணு உபகரணம் காரணம்?

கடந்த கிழமை ​இந்தியாவின் எல்லையோர மாநிலமான உத்தரகாண்ட் (Uttarakhand) ஊடே செல்லும் Dhauliganga ஆறு திடீரென பெருக்கெடுத்ததால் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியும், தொலைந்தும் ​இருந்தனர்​.​ ஆற்றின் ஆரம்ப மலை பகுதியில் ​g​lacier (​கிளேசியர், ​இறுகிய snow) உடைந்து வீழ்ந்ததாலேயே மேற்படி திடீர் வெள்ளம் உருவாகியது​ என்று கூறப்பட்டது.

ஆனால் சூழல் வெப்பம் ஆகலால் glacier உடைந்த கருத்துக்கு இதுவரை ஆதரங்கள் எதுவும் இந்திய அரசால் வெளியிடப்படவில்லை. பொதுவாக செய்மதி படங்கள் போன்ற ஆதாரங்கள் மேற்கூற்றுக்கு ஆதரவாக வெளியிடப்படும்.

ஆதாரங்கள் அற்ற நிலையில் அப்பகுதி மக்கள் இன்னோர் கருத்தை முன்வைத்து உள்ளனர்.

1965ம் ஆண்டு சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அமெரிக்காவின் CIA, இந்தியாவின் உதவியுடன், அணு சக்தியில் இயங்கும் உபகரணம் (plutonium-powered surveillance device) ஒன்றை அப்பகுதி மலை உச்சி ஒன்றில் வைக்க முனைந்து இருந்தது. மின் சக்தியோ அல்லது எரிபொருளோ அற்ற இப்பகுதில் அணு சக்தியே சாதகமானதாக இருந்தது.

ஆனால் அந்த முயற்சி பனிப்புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தது. அதனால் அந்த உபகரணத்தை அங்கேயே மறைத்து, பணியாளர் திரும்பி இருந்தனர். பின்னர் அது பனி சரிவுகள் காரணமாக ஆழமான பகுதியுள் வீழ்ந்து தொலைந்து இருந்தது. CIA அதை மீட்கவில்லை.

அந்த அணு உபகரணமே வெடித்து, glacier உடைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தற்போது கருதுகின்றனர்.