இந்திய இராணுவ ஹெலி விபத்தில், 14 பேர் பலி

இந்திய இராணுவ ஹெலி விபத்தில், 14 பேர் பலி

இந்திய இராணுவத்துக்கு சொந்தமான Mi-17V5 வகை ஹெலி ஒன்று புதன்கிழமை காலை தமிழ்நாட்டு குன்னூர் பகுதியில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. அந்த விபத்துக்கு இந்திய உயர் இராணுவ அதிகாரியான (Chief of Defense Staff) ஜெனரல் Bipin Rawat, வயது 63, அவரின் மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர். Varun Singh என்ற ஒருவர் மட்டும் உயிர் தப்பி உள்ளார்.

இந்த ஹெலி சூலூர் என்ற இடத்து இராணுவ தளம் ஒன்றில் இருந்து சுமார் 100 km தொலைவில் உள்ள Wellington நகருக்கு செல்கையிலேயே விபத்துக்கு உள்ளானது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

கேரள எல்லைக்கு அண்மையில் உள்ள குன்னூர் ஒரு தேயிலை வளரும் மலைப்பகுதியாகும். விபத்துக்கு உள்ளன ஹெலியும் மலைப்பகுதியிலேயே மோதி உள்ளது.

1981ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த இவ்வகை ரஷ்ய ஹெலிகள் மிக தரமானவை என்றாலும், நீண்டகால பாவனை, தரமான பராமரிப்பு இன்மை ஆகிய காரணங்களால் இவை விபத்துக்கு உள்ளாகின்றன. 2017ம் ஆண்டு அருணாச்சல் பிரதேசத்தில் இராணுவ ஹெலி விபத்துக்கு உள்ளாகி 7 படையினர் பலியாகி இருந்தனர்.

இலங்கை உட்பட சுமார் 60 நாடுகளில் இவ்வகை transport ஹெலிகள் பாவனையில் உள்ளன. கனடிய படைகளிடம் உள்ள இவ்வகை ஹெலிகள் நங்கு CH-178 (Chinook) என அழைக்கப்படும்.