இந்திய குகையில் வாழ்ந்த உல்லாச பயணிகள்

Rishikesh

இந்தியாவின் பக்கமாக இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள Rishikesh என்ற பகுதி குகை ஒன்றில் 6 உல்லாச பயணிகள் வாழ்ந்ததை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கூற, போலீசார் அங்கு சென்று 6 பயணிகளையும் மீட்டு உள்ளனர்.
.
அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ், யுக்கிரைன், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பயணித்த 6 உல்லாச பயணிகள் Rishikesh பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். கொரோனா காரணமாக போக்குவரத்துக்கள் தடைப்பட, அங்கு முடங்கிய இவர்களுக்கு பண தட்டுப்பாடு ஏற்பட, அவர்கள் மேற்படி குகைக்கு சென்று தங்கினார்.
.
தனித்தனியே இந்தியா சென்ற 4 ஆண்களையும், 2 பெண்களையும் கொண்ட மேற்படி குழுவில் இருந்த நேபாளத்து பயணி ஹிந்தி தெரிந்தவர். அவரே ஏனையோருக்கு தினசரி கொள்வனவுகளை செய்ய உதவியாக இருந்துள்ளார்.
.
மொத்தம் 25 நாட்கள் குகையில் வாழ்ந்த இவர்களை மீட்ட போலீசார் இவர்களுக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ஒழுங்கு செய்துள்ளனர்.
.
Rishikesh பகுதியில் சுமார் 700 வெளிநாட்டு உல்லாச பயணிகள் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
.
அதேவேளை வீட்டுள் முடங்கி இருக்குமாறு பணித்ததை மீறி இப்பகுதில் நடமாடி திரிந்த சில வெளிநாட்டு உல்லாச பயணிகள் “I did not follow the lockdown, I am sorry” என்று 500 தடவைகள் எழுத பணிக்கப்பட்டனர்.
.