இந்திய செய்தியாளர் கைது, பார்வையாளர் கணிப்பில் ஊழல்?

இந்திய செய்தியாளர் கைது, பார்வையாளர் கணிப்பில் ஊழல்?

அமெரிக்காவின் Fox News போன்ற வலதுசாரி பக்கச்சார்பு தொலைக்காட்சி சேவையை இந்தியாவில் இயக்கிவரும் ARG Outlier Media Lyd. நிறுவனத்தின் அதிபர் (CEO) Vikas Khanchandani இன்று ஞாயிற்றுக்கிழமை மும்பாயில் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் 12 பேரும் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

மக்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி, மின் கட்டணமும் செலுத்தி, தனது Republic TV தொலைக்காட்சி சேவையை மட்டும் காண பணமும் வழங்கியதே இவர் மீதான குற்றச்சாட்டு. மக்கள் தொலைக்காட்சியை பார்வையிடாத நேரங்களிலும் தொலைக்காட்சியை இயங்க விடுமாறு கூறப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம் அவரின் நிகழ்ச்சிக்கான Rating சுட்டியை அதிகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இவரின் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் எல்லாம் பிரதமர் மோதியையும், அவரின் பா.ஜ. கட்சியையும் துதிபாடி, அதேவேளை மோதி ஆட்சியில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இன்மை, கரோனா தொடர்பான பதிப்புகள் போன்ற பாதக செய்திகளை மறைக்கும். அத்துடன் எதிர் கட்சிகள் மீது உறுதி செய்யப்படாத கருதிகளையும் வெளியிடும்.

மும்பாய் நகர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தாலும், அந்த மாநில ஆட்சியில் இருப்பது பா.ஜ. கட்சியை உள்ளடக்கிய ஒரு கூட்டணியே. அந்த கூட்டணியில் உள்ள NCP, INC ஆகிய மற்றைய கட்சிகளை பா.ஜ. தன் விருப்பப்படி கட்டுப்படுத்த முடியவில்லை.

மேற்படி கைதின் பின் தொலைக்காட்சி சேவைகள் பார்வையாளர் கணிப்பை செய்யும் Broadcast Audinace Research Council விசாரணைகள் முடியும்வரை தமது செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது.

இன்று அமெரிக்கா இரண்டாக பிளந்து இருக்க பிரதான காரணம் சொந்த இலாப நோக்கங்கொண்ட வலது, மற்றும் இடது சார்பு செய்தி நிறுவனங்களே.