இந்திய திரையரங்குகளில் கட்டாய தேசியகீதம்

India

இந்திய திரையரங்குகள் படம் ஆரம்பிக்கு முன் கட்டாயமாக இந்திய தேசியகீதத்தை பாடவேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் இன்று புதன் கூறியுள்ளது. ஆதிகாலங்களில் இவ்வாறு இந்திய தேசியகீதம் பாடப்பட்டு இருந்திருந்தாலும் அண்மைக்காலங்களில் அவ்வாறு பாடுவது நின்று போயுள்ளது. தற்போது உயர் நீதிமன்றம் மீண்டும் தேசீயகீதம் பாடலை கட்டாயப்படுத்தி உள்ளது.
.
அவ்வாறு கீதம் பாடப்படும்போது, இந்திய தேசிய கொடி அல்லது கொடி உருவமும் கொண்டிருக்கப்படல் வேண்டுமாம். அதுமட்டுமன்றி திரையரங்கின் கதவுகள் மூடப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தலும் வேண்டுமாம்.
.
இந்திய தேசிய கீதம் பாடல் சுமார் 52 செக்கன்கள் நேரம் கொண்டதாகும்.
.
இதுவரை மஹாராஷ்ரா மாநிலத்தில் மட்டுமே இவ்வாறு ஒரு சட்டம் இருந்து வந்துள்ளது.
.

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் Shekhar Kapur, பாராளுமன்றத்திலும் இவ்வாறு தேசியகீதம் பாடப்படலை உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கல் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
.