இந்திய தூசு புயலுக்கு 125 பேர் பலி

India

இந்தியாவின் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், புஞ்சாப் ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை வீசிய தூசு புயலுக்கு சுமார் 125 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 200 பேர்வரை காயப்பட்டும் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் சுமார் 111 பேர் பலியாகி உள்ளனர். தாஜ்மகால் உள்ள Agra பகுதியில் சுமார் 46 பேர் பலியாகி உள்ளனர்.
.
கடும் காற்று, கடுமையான மின்னல்கள் என்பன தூசு புயலுடன் கூடவே குடியிருப்புகளை தாக்கி உள்ளன. ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் 41,000 மின்னல்கள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
.
சில இடங்களில் காற்று சுமார் 160 km/h வேகத்தில் வீசியுள்ளது. இதனால் மரங்கள் முறிந்து, வீடுகள் உடைந்தும் உள்ளன. மண் சுவர்கள் இடந்து வீடுகளுள் இருந்தோர் மீது விழந்து அவர்களை காயப்படுத்தியும் உள்ளன.
.
இந்த புயலுக்கு சுமார் 12,700 மின் கம்பங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
.
மரணித்தவர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 4 இலட்சம் ரூபாய்கள் வழங்க உத்தர பிரதேச அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.
.

.
.

.