இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

மார்ச் மாதம் 27ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 29ம் திகதி வரை இந்தியாவின் அசாம், கேரளா, பாண்டிச்சேரி (union territory), தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று முடிவுகள் வெளிவருகின்றன.

சட்டப்படியான இறுதி முடிவுகள் வெளிவரவில்லை என்றாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு:

அசாம் (126 ஆசனங்கள், பெரும்பான்மைக்கு 64):
இங்கே BJP முன்னணியில் இருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 64 ஆசனங்களை பெறுமா என்பது தற்போதும் கேள்விக்குறியே.


கேரளா (140 ஆசனங்கள், பெரும்பான்மைக்கு 71):
இங்கே CPI-M முன்னணியில் இருந்தாலும் பெரும்பான்மை ஆட்சிக்கு தேவையான 71 ஆசனங்களை பெறுமா என்பது தற்போதும் கேள்விக்குறியே.


பாண்டிச்சேரி (30 ஆசனங்கள், பெரும்பான்மைக்கு 16):
இங்கே AIADMK-BJP-NR Congress கூட்டணி முன்னணியில் உள்ளது.


தமிழ்நாடு (234 ஆசனங்கள், பெரும்பான்மைக்கு 118):
இங்கே திமுக 134 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றலாம். அதனால் இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். Stalin முதலமைச்சர் ஆக, அங்கு மீண்டும் குடும்ப ஆட்சி பதவிக்கு வரும். கமல் ஹாசன் 51,087 வாக்குகளை பெற, அவருக்கு எதிராக போட்டியிடும் BJP கட்சியினர் 52,627 வாக்குகளை இதுவரை பெற்று உள்ளார். சீமான் தனது தொகுதியில் 3ம் இடத்தில் உள்ளார்.


மேற்கு வங்கம் (294 ஆசனங்கள், பெரும்பான்மைக்கு 148):
இங்கே மாநில Momatha Banerjee தலைமையிலான கட்சியான AITC சுமார் 215 ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகை 2/3 பெரும்பாண்மைக்கும் அதிகமான தொகையாகும். காங்கிரஸ், CPI ஆகிய இரண்டு கட்சிகளும் பெருமளவு ஆசனங்களை இழக்க, BJP அவற்றை பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கும்.


AIADMK: All India Anna Dravida Munnetra Kazhagam
DMK: Dravida Munnetra Kazhagam
BJP: Bharatiya Janata Party
INC: Indian National Congress
AGP: Asom Gana Parishad
AIUDF: All India United Democratic Front
BPF: Bodoland People’s Front
CPI-M: Communist Party of India (Marxist)
IUML: Indian Union Muslim League
KEC-M: Kerala Congress – Mani
AINRC: All India N. R. Congress
PMK: Pattali Makkal Katchi
VCK: Viduthalai Chiruthaigal Katchi
MNM: Makkal Neethi Maiam