இந்திய விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது

Kashmir

இந்தியாவின் 2 யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இன்று கூறியுள்ளது. அத்துடன் ஒரு இந்திய விமானியையும் கைப்பற்றி உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது.
.
இந்தியா தமது தரப்பில் ஓர் MiG 21 யுத்த விமானத்தை இழந்துள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் ஒரு விமானியும் தவறியுள்ளார் என்றும் இந்தியா கூறியுள்ளது. இந்திய தரப்பு இழப்பை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Raveesh Kumar அறிவித்துள்ளார்.
.
பாகிஸ்தான் தரப்பு இணையங்களில் வீழ்ந்த இந்திய விமானியை தாக்குவது போன்ற காட்சிகள் பதியப்பட்டு இருந்தன. அவை தற்போது அந்த இணையங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகிய தரப்புகள் பாகிஸ்தானையும், இந்தியாவையும் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளன.
.
பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடி இருந்தது. இந்தியாவும் குழப்பத்துக்குரிய பகுதியில் வான் தடையை அறிவித்து இருந்தது. இதனால் பல விமானங்கள் தமது பாதையை இடைவெளியில் மாற்றி இருந்தன.
.