இந்திய வைத்தியசாலையில் இருநாளில் 30 சிறுவர் பலி

UttarPradesh

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள Gorakhpur என்ற இடத்து வைத்தியசாலை ஒன்றில் 30 சிறுவர்கள் சுமார் 48 மணித்தியாலத்துள் பலியாகி உள்ளனர். கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் இந்த 30 சிறுவர்களும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
.
பலியான சிறுவர்கள் நுளம்பினால் பரவும் Japanese encephalitis என்ற நோயினால் பாதிக்கப்பட்டு மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையிலேயே அவர்கள் பலியாகி உள்ளனர். இந்த சிறுவர்கள் தமது நோய் காரணமாக பலியாகினரா அல்லது வேறு காரணத்தால் பலியாகினரா என்பதை அறிய விசாரணைகள் இடம்பெறுகின்றன.
.
மரணித்த சிறுவர்கள் 5 முதல் 12 வயதுடையோர் என்று கூறப்படுகிறது.
.
Baba Raghav Das (BRD) என்ற இந்த வைத்தியசாலை ஒரு அரச வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலை Pushpa Sales என்றநிறுவனம் oxygen விநியோகம் செய்வதாகவும், வைத்தியசாலை அந்த நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் இந்திய ரூபாய்கள் ($107,000) கடனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பணம் செலுத்தாத காரணத்தால் அந்த வைத்தியசாலைக்கு வரவிருந்த liquid oxygen விநியோகம் இடைநிறுத்தப்பட்டு இருந்துள்ளது என்ற செய்தியும் பரவியுள்ளது. ஆனால் அதை வைத்தியசாலை மறுத்துள்ளது.
.
அதேவேளை aljazeera செய்திகளின்படி இந்த வைத்திசாலையில் ஐந்து நாட்களில் குறைந்தது 60 சிறுவர்கள் பலியாகி உள்ளனர்.

.