இந்திய iPhone தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம்

இந்திய iPhone தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் பெங்களூருக்கு அண்மையில் உள்ள Narsapura பகுதியில் அமைந்துள்ள Wistron என்ற தாய்வான் தொழிற்சாலையில் சுமார் 2,000 ஊழியர்கள் இன்று ஞாயிரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர் தொழிற்சாலை உடமைகளையும், வாகனங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

நாலு மாதங்கள் வரை தமக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஆர்பாட்டக்காரர் கூறியுள்ளனர். ஊதியம் வழங்கப்படாத நிலையிலும் தம்மை மிகையான நேரம் பணிபுரிய பணிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக உள்ளூர் ஊழியர்களை பணிக்கு அமர்த்தாது, அரசியல் செல்வாக்கு கொண்ட உள்ளூர் வேலைவாய்ப்பு முகவர் மூலமே பணிக்கு அமர்த்தும்.

நிலைமை தற்போது கடுப்பாட்டுள் வந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். விசாரணனைகள் தொடர்கின்றன.

இந்த தொழிற்சாலையில் சிலவகை iPhone தயாரிக்கப்படும். இங்கு சுமார் 15,000 பேர் தொழில்புரிகின்றனர். உலக அளவில் Wistron நிறுவனம் சுமார் 83,000 ஊழியர்களை கொண்டுள்ளது.