இன்ரபோல் தலைவரையே காணவில்லை

HongWei

தற்போதைய இன்ரபோல் தலைவர் (Interpol president) காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. Meng Hongwei என்ற சீனாவை சார்ந்த இவர் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போயுள்ள விபரத்தை அவரின் மனைவி இன்ரபோலுக்கு தெரிவித்து உள்ளார்.
.
சீன நாட்டவரான மனைவி முதலில் சீனாவிடம் கணவனின் தொலைவு தொடர்பாக கூறி இருந்தாரா என்பதுவும், அவ்வாறு செய்யாவிடின் ஏன் அவர் சீனாவுக்கு முதலில் தொலைவை அறிவிக்கவில்லை என்பதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.
.
ஹாங் காங் (Hong Kong) நகரில் இருந்து வெளிவரும் South China Morning Post பத்திரிகை Meng Hongwei சீனாவில் விசாரணைக்காக அழைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது. ஆனால் சீனா இவ்விடயம் தொடர்பாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
.
சுமார் 40 வருடங்கள் சீன காவல்துறை மற்றும் நீதி துறையில் அனுபவம் கொண்ட Meng Hongwei முன்னர் சீனாவின் Public Security அமைச்சின் உதவி அமைச்சராகவும் பதவி வகித்தவர். 2016 ஆம் ஆண்டில் இன்டர்போல் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இவர் 2010 ஆம் ஆண்டு வரை அப்பதவியை கொண்டிருக்கலாம்.
.
இன்டர்போல் காணாமல் போன ஒருவரை அல்லது சந்தேக நபர் ஒருவரை சர்வதேச அளவில் தேட red notice விடலாம். ஆனால் அவர்கள் இன்னோர் நாட்டுள் நுழைந்து காணாமல் போனவரை தேடவோ அல்லது சந்தே நபரை தேடவோ அனுமதி இல்லை.

.